சூரிய மின்சக்தி மிகப்பெரிய சந்தையாக உருவாகும் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் இவர். தற்போதைய விலையை விட 10 மடங்கு கூடுதல் விலை இருக்கும் சமயத்தில் இவரது கணிப்பு வெளியானது. இதன் காரணமாகவே இவரின் தற்போதைய கூற்று அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கணிப்புகள் என்ன?
வரும் 2030-ம் ஆண்டில் தற் போதைய முறையில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடையும். 95 சதவீதத்தினர் சொந்தமாக கார் வைத்திருக்க மாட்டார்கள். உற்பத்தி நிறுவனங்கள், டீலர்கள், சேவை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை அதிகமாக பாதிக்கப்படும். இந்த இடத்தை எலெக்ட்ரிக் வாகனங்கள் பிடிக்கும். வருங்காலத்தில் எலெக்ட் ரிக் வாகனங்களின் விலையும் கணிச மாக குறையும். அதனால் தற்போதைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டிரைவர் தேவைப்படாத எலெக்ட்ரிக் வாகனங்களை அசெம்பிள் செய்யும் நிறுவனங்களாக மாறக்கூடும் என கணித்திருக்கிறார்.
கார்கள் உள்ளிட்டவை இல்லை என்றால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் துறையில் பேரழிவு உருவாகும். பேரழிவு என்னும் வார்த்தையையே அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
கச்சா எண்ணெய் தேவை 2021-ம் ஆண்டில் அதிகபட்சம் 10 கோடி டாலர் வரையில் செல்லும். அடுத்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் தேவை 7 கோடி டாலராக குறையும். தேவை குறையும் போது உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்குதான் விற்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
உலகின் முக்கியமான பொருளா தாரமான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்து கின்றன. 2025-ம் ஆண்டுக்குள் 20% எலெக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என சீனா திட்டமிட்டிருக் கிறது. அதேபோல 2032-ம் ஆண்டுக் குள் அனைத்து கார்களும் எலெட்ரிக் கார்களாக மாற்ற இந்தியாவும் திட்டமிட் டிருப்பது கவனிக்க வேண்டும்.
எந்த ஒரு கருத்துக்கும் எதிர்க் கருத்து இருக்கும். அதுபோல எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயராது என்னும் கணிப் பும் இருக்கிறது. எக்ஸான் மொபில் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், வரும் 2035-ம் ஆண்டில் மொத்த கார்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் கார்கள் இருக்கும் என கணித்திருக்கின்றன. இது இந்த துறையை சார்ந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கலாம்.
இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை குறையும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றம் இருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்.