- TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 26, 2017

FLASH NEWS :அனைத்து பள்ளிகளும் திறக்கும் தேதி ஒத்திவைப்பு. பள்ளிகள் திறப்பு ஜூன் 7 - அமைச்சர் அறிவிப்பு.ஜீன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பு...
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந்தேதி திறக்கப்படும் அரசு கூறியுள்ளது.கோடை வெயில் தாக்கம்
காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் மாதம் முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டது.
அப்போது பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தமிழக தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பருவமழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளிலும் இதே நிலை நீடிப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குடிநீருக்கே அவதிப்படும் நிலை ஏற்படும்.
பெற்றோர் அச்சம்
மேலும் பள்ளிக் கட்டிடங்களில் 8 மணி நேரம் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் கடுமையான வெயிலினால் உடல் சோர்விற்கு ஆளாக நேரிடும் என்பதோடு, அம்மை உள்ளிட்ட தொற்றுநோய் அபாயமும் இருக்கின்றன. இதனால் பள்ளிகளை ஏற்கனவே அறிவித்தபடி திறந்தால் மாணவர்களுக்கு வெயில் தாக்கம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அஞ்சுகின்றனர்.அரசுக்கு கோரிக்கைஇது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் ஆசிரிய சங்கங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தன.
தள்ளி வைப்பு அறிவிப்பு
இதனையடுத்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வரும் ஜுன் 7ந் தேதி திறக்கப்படும் எனபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் வரவேற்பு
இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பியதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

No comments:

Post a Comment