கேரளாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, முதல் வகுப்புக்கே, 'டிஜிட்டல்' வழி கல்வி முறையை அறிமுகப் படுத்தப் போவதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஐ.சி.டி., எனப்படும், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு என்ற தொழில்நுட்பம் மூலமாக, அரசு பள்ளிகளில், 8 - 10 வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல், 1 - 7ம் வகுப்பு மாணவர்களுக்கும், டிஜிட்டல் வழி கல்வியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக, கேரள மாநில கல்வி துறை தெரிவித்துள்ளது.
இதற்காக, மாணவர்களுக்கான பிரத்யேக இணையதளம் மற்றும் பாடம் குறித்த தகவல்கள் அடங்கிய, 'டிவிடி'யையும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கேரள மாநில கல்வி துறை அமைச்சர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment