'வெயில் வாட்டி வதைப்பதால், பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் நிர்வாகிகள், நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையனிடம் கொடுத்த மனு: தமிழகத்தில், வரலாறு காணாத வகையில், வெயில் இருப்பதால், சிறுவர் முதல், பெரியவர் வரை, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. ௨௦க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், வெயில் சதத்தை தாண்டி உள்ளது.
கற்றல் - கற்பித்தல் பணி என்பது, உடலும், உள்ளமும் சீராக இருந்தால் மட்டுமே, சிறப்பாக அமையும். எனவே, மாணவர்கள் உடல் நலன் கருதி, ஜூன், 1ல் பள்ளிகளை திறக்காமல், வெயிலின் அளவு குறையும் வரையோ அல்லது இரண்டு வாரங்களோ தள்ளி திறக்க
வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment