நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதில் மே மாதம் 7-ம் தேதி மருத்துவ பாடங்களுக்கான நீட் தேர்வை பல மொழி மாணவர்கள் எழுதினர். இதில் ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை, ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாளுக்கும் தமிழில் இருந்த வினாத்தாளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதனால் இந்தத் தேர்வை செல்லாது என்று அறிவித்து, அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளிதரன் மாணவ மாணவிகளின் மனுவை ஏற்று, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.
மேலும் இது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு சிபிஎஸ் இயக்குனருக்கும் மருத்துவ கவுன்சில் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment