விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள்: அரசாணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 30, 2017

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரத்தில் புதிய சட்டக் கல்லூரிகள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவாக புதிய அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதன்படி, மேற்கண்ட இடங்களில் புதிய கல்லூரிகள் அமைப்பதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment