இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 26, 2017

இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு


ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர ஊதியத்தை 4200 ஆக மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட்டு, பிறகு 7வது ஊதியக் குழு பரிந்துரைக்கும் ஊதியத்தில் நிர்ணயம் செய்தலே சிறந்த தீர்வு.

75 % சதவிகித ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு.

இதனை நோக்கியே அனைத்து சங்கங்களையும் பயணிக்க வைப்போம்.
அறிவித்த பிறகு எதுவும் செய்ய முடியாது.

     அரசின் கஜானா காலி என்ற காரணத்திற்கும் இம் முடிவு நிச்சயம் தீர்வாக அமையும்.

      நாம் தற்பொழுது பெற்று வரும் ஊதியத்திற்கு 2.62 முறையில் கணக்கிட்டால் - 7 வது ஊதியக் குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்றாகி விடும். இதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

      6 வது ஊதியக் குழுவில் திருத்தம் செய்து  மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்ற பிறகு, புதிய ஊதியம் நிர்ணயம் செய்தலே இ.நி.ஆசிரியர்களின் ஊதியம் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்திற்கு சமமாகும்.

      ஜுன் 5 க்குள் ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் ஊதிய நிர்ணய கோரிக்கைகளை அரசு கேட்டுள்ளது. ஜுன் 30க்குள் அரசு புதிய ஊதியக் குழு விற்கு இறுதி வடிவம் கொடுத்து விட முடிவாற்றியுள்ளது. அதற்குள் இக்கோரிக்கை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் உறுதி வடிவமாக்கி அரசுக்கு அனுப்பி வைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். இறுதி வெற்றி நமதாக இருக்கட்டும்...

No comments:

Post a Comment