ரூ.2 லட்சத்துக்கு சொகுசு கார்கள்: சென்னையில் கூவி கூவி விற்பனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 23, 2016

ரூ.2 லட்சத்துக்கு சொகுசு கார்கள்: சென்னையில் கூவி கூவி விற்பனை

'சொகுசு கார் வாங்க முடியவில்லையே' என்ற ஏக்கத்தை போக்கும் வகையில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு, 'ஆடி, பி.எம்.டபிள்யூ.,' நிறுவனங்களின் சொகுசு கார்களை, சென்னையில், கூவி, கூவி விற்று வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த கார்களை வாங்க, வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வர துவங்கியுள்ளனர்.

சென்னையில், கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக, 30 ஆயிரம் கார்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்கள், அவற்றை வைத்திருக்க விரும்பாததால், பழைய கார் விற்பனை நிறுவனங்களுக்கு வந்த விலைக்கு விற்று வருகின்றனர்.இதனால், தேசிய அளவில், பழைய கார்களை வாங்கி விற்கும் இணைய தள வர்த்தக நிறுவனங்களின் பார்வை, சென்னையை நோக்கி திரும்பியுள்ளது. குறிப்பாக, 'கார் தேகோ' மற்றும் 'கோபார்ட்' ஆகிய சர்வதேச நிறுவனங்கள், சென்னையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை, ஏல விற்பனைக்கு இணையத்தில் காட்சிப்படுத்தியுள்ளன. சென்னை திருவேற்காட்டில், 5 ஏக்கரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.பல பிரபல நிறுவனங்களின் சொகுசு கார்களின் ஏலத்தொகை, இரண்டு லட்சம் ரூபாய்க்கு துவங்குகிறது. இதேபோல், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரின் ஏலத்தொகை, ஐந்து லட்சம் ரூபாய் முதல் துவங்குகிறது.

இதுகுறித்து, பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் கூறியதாவது: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கார்கள், நல்ல நிலையில்தான் உள்ளன. சிறிய அளவில் பாதிப்படைந்த கார்களை கூட, அதன் உரிமையாளர்கள் வைத்திருக்க விரும்பாததால், அவற்றை வந்த விலைக்கு விற்று விடுகின்றனர். இதனால், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த விலையில், சொகுசு கார்கள் கிடைக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment