ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்...!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, June 1, 2016

ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்...!!

ஜூன் 12-ல் ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இதில் ஐஐடி-ஜேஇஇ மெயின் தேர்வுகள் முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து அட்வான்ஸ்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதன் முடிவுகள் ஜூன் 12-ல்
வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
இந்த ஆண்டு கௌஹாத்தியிலுள்ள ஐஐடி, இந்தத் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகளை www.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இணையதளத்துக்குச் சென்ற பின்னர் 'JEE Advanced Results 2016' என்ற இடத்தில் கிலிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண் போன்ற விவரங்களைக் கொடுத்து முடிவுகளைக் காணலாம்.

No comments:

Post a Comment