செல்போனில் வரும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 10, 2017

செல்போனில் வரும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்பு அறிவித்தது போலவே, வரும் மே 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்தார்.
இது குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள 9 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் முன்பு அறிவித்தது போலவே 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் பெற்றோர்களது செல்போனுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் வந்தடையும் வசதியும் செய்யப்பட்டுள்ளது, என்றும் தெரிவித்தார்.
இணையத்தில் வெளியாகும் முடிவுகளும், காலதாமதம் இன்றி உடனே வெளியாகும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதாம். அதேபோல், நீட் தேர்வுக்காக பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பது குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை, என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment