அமெரிக்காவில் சிக்காகோ நகரில் ஹேமார்க்கெட்டில் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி நடைபெற்ற அமைதியான பேரணி, கலவரமாக ஆனது. காவல் துறை, போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் 1886-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் பொருட்டு முதன் முதலில் அமெரிக்காவில் மே தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் நினைவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த தொழிலாளர் தினக் கொண்டாட்டத்திலும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. 1923-ம் ஆண்டு சென்னையில் மெரினா கடற்கரையில்தான் இந்தியாவின் முதல் மே தின விழா கொண்டாட்டப்பட்டது. தொழிலாளர் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. இதை நினைவுகூரும் வகையில் அந்த இடத்தில் 1959-ம் ஆண்டு உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. இதைச் சிற்பி தேவி பிரசாத் ராய் செளத்ரி வடிவமைத்தார்.
இதேபோல் நியூயார்க் நகரத்தில் பெண் தொழிலார்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளையைக் கண்டு மிரளாத சிறுமியின் சிலை அது. பணியிடத்தில் பெண்களுக்கான இடம், பாலினச் சமத்துவம் ஆகியவற்றை இந்தச் சிலை சித்திரிக்கிறது. இதுபோல உலகின் பல பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் சிலைகளின் ஒளிப் படத் தொகுப்பு இது.

ஃபியர்லெஸ் கேர்ள், அமெரிக்கா

ஹேமார்க்கெட் ட்ராஜெடி, அமெரிக்கா
 
எம்மா மில்லர், ஆஸ்திரேலியா

 
மானுமெண்ட் டூ லேபர், அமெரிக்கா


சர்வதேசத் தொழிலாளர் சங்கத் தலைமையிடச் சிலை, சுவிட்சர்லாந்து

ஸ்பிரிட் ஆஃப் சாலிடாரிட்டி, அமெரிக்கா

உழைப்பாளர் சிலை, சென்னை