எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, May 11, 2017

எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) காலியாக உள்ள, 32 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்ற பின், 25 சி.இ.ஓ.,க்கள், 14 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர், நான்கு பேருக்கும் சி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து, எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களையும் கூடுதலாக கவனிப்பதால், ரெகுலர் சி.இ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் தொடக்க கல்வி தரம் கண்காணிப்பு, இடைநிற்றலை தடுப்பது போன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சி.ஆர்.சி., பயிற்சி கூட்டங்கள், வகுப்பறை கட்டட பணிகளை ரெகுலர் சி.இ.ஓ.,க்கள் நேரடியாக களஆய்வு செய்வதில்லை. பணிமூப்பு பட்டியலில், இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர், பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறுகின்றனர்.
தற்போது மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க கல்வித்துறை தயாராகி வருகிறது. எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், 32 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், டி.இ.ஓ.,க்களாகவும், 32 டி.இ.ஓ.,க்கள் சி.இ.ஓ.,க்களாகவும் பதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
இதுகுறித்து உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக நிர்வாகி சாமிசத்தியமூர்த்தி, "இப்பணியிடங்களை நிரப்பி ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் பணிகளையும் அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆசிரியர் பொது மாறுதல்
கலந்தாய்விற்கு முன், இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

No comments:

Post a Comment