ஆதார், பான் கார்டில் உள்ள பிழையை திருத்த புதிய வழிமுறையை வருமான வரி துறை அறிமுகப்படுத்தியது..! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 15, 2017

ஆதார், பான் கார்டில் உள்ள பிழையை திருத்த புதிய வழிமுறையை வருமான வரி துறை அறிமுகப்படுத்தியது..!

ஆதார், பான் கார்டில் உள்ள பிழையை திருத்த புதிய வழிமுறையை வருமான வரி துறை அறிமுகப்படுத்தியது..!
ஜூலை 1-க்கு முன் பான் கார்டுடன் ஆதார் கார்டினை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்துப் பல பிரச்சனைகள் கிளம்பியது. அதில் முக்கியமான ஒன்று இரண்டு கார்டுகளிலும் பெயர் மற்றும் பிற விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் பான் கார்டில் பெயருடன் இனிஷியலும், ஆதார் கார்டில் பெயர் மற்றும் இருந்ததால் இணைப்புச் செய்ய முடியவில்லை. இதைப் போக்கும் விதமாக இணையதளம் வாயிலாகப் பான் கார்டு மற்றும் அதார் கார்டுகளில் உள்ள பிழையை நீக்க புதிய சேவையை வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. புதிய இணைப்பு பான் கார்டுடன் ஆதார் ஆட்டையை இணைப்பதற்காகப் புதிதாக இரண்டு இணைப்பைச் சேர்த்துள்ளது வருமான வரித் துறை. அதில் ஒரு இணைப்பின் மூலமாகப் பான் விவரங்களைத் திருத்துவது அல்லது புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றைச் செய்யலாம். இரண்டாவது இணைப்பு இரண்டாவது இணைப்பில் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி ஆதார் சுய சேவைத் தளத்தில் உள்நுழைந்து தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து விவரங்களைப் புதுப்பிக்கக் கோரிக்கை வைக்கலாம். இணைப்பை பூர்த்திச் செய்தவர்கள் விவரம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பில் மொத்தமாக உள்ள 25 கோடி பான் கார்டு பயனர்களில் 1.22 கோடி நபர்கள் இரண்டையும் இணைத்துள்ளனர். ஆதார் கார்டு மொத்தமாக 111 கோடி நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துனர்கள் எண்ணிக்கை வருமான வரித் துறையின் புள்ளிவிவரங்களின் படி 6 கோடி நபர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்கின்றனர். நிதி அமைச்சர் அறிவிப்பு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2017-2018ம் ஆண்டிற்கான நிதி மசோதா தாக்கல் செய்த போது வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் அதார் கார்டுடன் பான கார்டினை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment