Smart Ration Card Error Rectify: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31ம்தேதி கடைசி நாள் !!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 10, 2017

Smart Ration Card Error Rectify: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31ம்தேதி கடைசி நாள் !!!

Smart Ration Card Error Rectify: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 31ம்தேதி கடைசி நாள் !!!

       ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினரின் புகைப்பட குளறுபடியை சரி செய்ய வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
          இதை பூர்த்தி செய்து வரும்31ம்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கடந்த 1ம்தேதி முதல் `ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டுகளை பெற ஓடிபி எஸ்எம்எஸ் செல்போனில் வந்தபிறகு ஒருவாரத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது சரிவர இந்த திட்டம் செயல்படாததால் எஸ்எம்எஸ் வராவிட்டாலும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம் என்று பொது விநியோகத்துறை அறிவித்தது.
32 மாவட்டங்களில் இதுவரை சுமார் 35 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் குடும்ப அட்டைதாரரின் பெயர், ஊர் பெயர், போட்டோ என  பல்வேறு குளறுபடி, பிழைகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை சரிசெய்ய தமிழகத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் இந்த விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து சரியான வண்ண புகைப்படத்தை வைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் வருகிற 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னைக்கு அனுப்பி, சரியான புகைப்படத்துடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment