‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய ஆர்வம்: 1.03 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 2, 2021

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய ஆர்வம்: 1.03 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பம்

‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய ஆர்வம்: 1.03 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பம் தமிழக அரசின் ‘இல்லம் தேடிகல்வி’ திட்டத்தில் பணிபுரிய இதுவரை 1.03 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. 

        இந்த காலகட்டத்தில் கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில்தான் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன.எனினும், அவை நேரடி கற்பித்தலுக்கு இணையில்லாததால் பெரும்பாலான குழந்தைகளின் கற்றலில் தேக்க நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்ய, ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் தமிழகஅரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, பள்ளி நேரத்துக்கு பிறகு மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் பணிபுரிய விருப்பமுள்ளதன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. 

        இதையடுத்து இந்தப் பணிக்கு பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 548 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பித்துஉள்ளனர். அதில் 81,442 பேர் பெண்கள் ஆவர். இதுதவிர விண்ணப்பித்தவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பட்டதாரிகளாக உள்ளனர். அதில், 442 பேர் பிஎச்டி முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியில் சேரவிருப்பம் உள்ளவர்கள் illamthedikalvi.tnschools.gov.in என்றஇணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment