ஈரோடு மாவட்டம் , அம்மாபேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த குருவரெட்டியூர் துவக்கப் பள்ளிதான் இச்சாதனையை செய்யப்போகின்றது.
16-05-2017 வரை 90 மாணவர்களை முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சேர்க்க விண்ணப்பம் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. இன்னும் 10 மாணவ்ர்களைச் சேர்த்து 100(சதம்) ஆக்க ஆசிரியர்கள் களப்பணி ஆற்றிக்கொண்டு உள்ளனர்.
சாத்தியமானது எப்படி !?
பள்ளி விடுமுறை அறிவித்தவுடன் இப்பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்கள்
1)உள்ளூர் மக்களின் உதவியோடு 16ப்ளக்ஸ் அடித்து பள்ளியின் அருகாமை ஊர்களில் முக்கிய இடங்களில் வைத்தனர்.
2) பள்ளியின் சிறப்புகள் குறிப்பிட்டு மாணவர் சேர்க்கைக்கு 1000 நோட்டீஸ் அடித்து பள்ளியினைச் சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலும் (10கி.மீ சுற்றளவிற்கு) தெருத் தெருவாக, வீடு வீடாக, காடு காடாகச் சென்று பெற்றோர்களிடத்தில் வழங்கி அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் சென்று பள்ளியின் சிறப்புகளை விளக்கிக் கூறினர்.
3) அனைத்து பகுதிகளிலும் நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாக திரும்பச் சென்று பள்ளியில் சேர்க்க விருப்பம் தெரிவித்த பெற்றோர்களிடம் இருந்து சேர்க்கை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டது.
இவ்வாறு திட்டமிட்டு களப்பணி மேற்கொண்டதால் 16-05-2017 காலை வரை 90 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது ஆசிரியர்கள் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மதிய உணவு இன்றி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நாட்களில் இருந்து களப்பணி ஆற்றி உள்ளனர்.
இந்தக் கிராமப்புறப் பள்ளியின் சென்ற ஆண்டு மாணவ்ர்கள் எண்ணிக்கை 183.ஐந்தாம் வகுப்பு முடிந்து இவ்வாண்டு 44 மாணவர்கள் மேல் வகுப்பில் சேர உள்ளனர். இவ்வாண்டு 139 +90 புதிய மாணவர்களோடு சேர்த்து இன்று வரை 229 மாணவ்ர்கள் உள்ளனர்.
இப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளின் உழைப்பிற்கு மக்களின் நம்பிக்கை, அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதற்கு சாட்சியே புதிய 90 மாணவர்களின் சேர்க்கையாகும்.
No comments:
Post a Comment