செப்., 1 முதல் 4, 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! மாநில அரசு தகவல்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 28, 2021

செப்., 1 முதல் 4, 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! மாநில அரசு தகவல்!

செப்., 1 முதல் 4, 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! மாநில அரசு தகவல்! 

 தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான நடைமுறைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

 இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளை மாநில அரசுகள் திறந்து வருகின்றன. 

     தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வி, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பல்வேறுகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். 

    அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியானது. இதனிடையே, சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மூன்றாம் அலை பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடியாத சூழல் தொடர்ந்து வரும் நிலையில் கல்வி கற்பிப்பதிலும், தேர்வுகளை நடத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. 

     தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு, நோய்க் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, பள்ளிகளைத் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் இறுதியாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

    அதில், கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பொது மக்கள் கூடும் இடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

     மேலும், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தேசித்து வருவதாக குறிப்பிட்டிருந்தது, தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவத் தேவைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். 

         இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதில், செப்டர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரலாம் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

 4, 5ம் வகுப்பு மாணவர்களும் வர வேண்டும் 

    தமிழகத்தைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

     மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் என்றும், சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

     ஏற்கனவே, ஹரியானா மாநிலத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 16ம் தேதியும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 23ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment