செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 21, 2021

செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ்

செப்டம்பர் 1ல் இருந்து 9,10 ,11,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

கொரோனா காரணமாக இந்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது,

        இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இன்று மருத்துவ குழுவுடன் இறுதி ஆலோசனை நடத்திவிட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment