மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடைபெறுகிறது.
இதற்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது.
கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்தது.
நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு.
அவர்களில் தமிழில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பவர்கள் மட்டும் 19 ஆயிரத்து 867 பேர் ஆகும்.
No comments:
Post a Comment