7வது சம்பள கமிஷன்.. செப்டம்பர் முதல் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்.. முழு கணக்கீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 22, 2021

7வது சம்பள கமிஷன்.. செப்டம்பர் முதல் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்.. முழு கணக்கீடு

7வது சம்பள கமிஷன்.. செப்டம்பர் முதல் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம்.. 

    முழு கணக்கீடு செப்டம்பர் முதல் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் வரலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது 
     சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%ல் இருந்து 28% ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு ஊழியர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

🔘🛑இந்திய வரைபடம் - மாநிலங்களின் முழு விபரத்துடன் https://tnttnews.blogspot.com/2021/08/blog-post_77.html 

 DA & HRA அதிகரிப்பு 

    இப்படி பல ஆண்டுகால காத்திருப்புக்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இருந்த முடக்கம் நீக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும். இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவெனில் HRA அலவன்ஸூம் 27% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிகரிப்பினால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன் பெறுவர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ-வினை அரசு நிறுத்தி வைத்தது. 

            ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரித்துள்ள நிலையில், தற்போது சில மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. 

    தற்போது உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் அடங்கும். அரசு உத்தரவின் படி ஹெச்.ஆர்.ஏ அலவன்ஸ் என்பது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
    அதில் திருத்தத்திற்கு பிறகு XYZ நகரங்களில், X பிரிவில் உள்ள நகரங்களுக்கு ஹெச்.ஆர்.ஏ அலவன்ஸ் 27% ஆக இருக்கும். இதே Y வகை நகரங்களுக்கு 18% ஆகவும், Z வகை நகரங்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 9% ஆகவும் இருக்கும். 

         ஒரு நகரத்தின் மக்கள் தொகையானது 5 லட்சத்தினை தாண்டினால், அது Z பிரிவில் இருந்து, Y வகை மாற்றம் பெரும். இந்த வகை ஊழியர்களுக்கு ஹெச்.ஆர்.ஏ-வும் 9%ல் இருந்து 18% ஆக அதிகரிக்கும். 

        இதே X பிரிவில் 50 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள நகரம் இருக்கும். இவர்களுக்கு 30% HRA செலுத்தப்படும். இதே Y பிரிவில் உள்ள 5 - 50 லட்சம் வரையிலான மக்கள் தொகை உள்ள நகரம் இருக்கும். இவர்களுக்கு 20% HRA செலுத்தப்படும். Z பிரிவில் 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்கள் இருக்கும். இவர்களுக்கு 10% HRA செலுத்தப்படும். 

        இந்த மூன்று பிரிவுகளுக்குமே ஹெச்.ஆர்.ஏ அலவன்ஸ் 5,400 ரூபாய், 3,600 ரூபாய் மற்றும் 1,800 ரூபாய் இருக்கும். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் மாற்றம் வரலாம். ஊதிய மேட்ரிக்ஸின் படி பார்த்தால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் 18000 ரூபாய் எனில், அவரது சம்பளம் 18000 * 2.57 = 46,260 ரூபாய் ஆகும். இதனுடன் HRA அலவன்ஸையும் சேர்க்கும்போது, இன்னும் சம்பளம் அதிகரிக்கும். மொத்தத்தில் செம்ப்டம்பர் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. 7 வது ஊதியக்குழு ஊதிய மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாகும். 18,000 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் 17%-ன் படி, ஊழியர்களுக்கு 2021 ஜூன் வரை 3060 ரூபாய் அகவிலைப்படி கிடைத்துக் கொண்டிருந்தது. 

ஜூலை 2021 முதல், இப்போது 28% அகவிலைப்படி என்ற நிலையில், செப்டம்பர் முதல் இது 5040 ரூபாயாக அதிகரிக்கும். இது முந்தைய அகவிலைப்படியினை விட மாதம் 1980 ரூபாய் அதிகமாக கிடைக்கும். குறைந்தபட்ச டிஏ அதிகரிப்பு 5,040 ரூபாயாகவும், குறைந்தபட்ச எச்ஆர்ஏ அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 1,800 ரூபாயாகவும் இருக்கும். 

அதாவது, செப்டம்பரில் வரும் சம்பளத்தில் 6840 ரூபாய் (5040 + 1800) அதிகரிப்பு இருக்கும். இது ஊழியர்களின் பல வருட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கிடைக்கவுள்ளது.

No comments:

Post a Comment