அனைத்து மாணவர்களும், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத இதர கல்லூரி பணியாளர்கள் கட்டாயம் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர். மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதனிடையே, கடந்த கொரோனா தொற்று அதிகரிப்பின் போது சில கல்லூரிகள் கோவிட் - 19 சிகிச்சை மையமாக செயல்பட்டது. சில கல்லூரிகள் தற்போதும் கெகாரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது.
அதுபோன்ற கல்லூரிகளில் ஆன்லைன் வழியிலான வகுப்புகளையே தொடர விரைவில் முடிவு செய்யப்படும்.
No comments:
Post a Comment