இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி நிர்வாகமும் தங்களது கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், மாணவர்கள் இருக்கைகள், நாற்காலிகள், விளையாட்டுக் கருவிகள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்து மாணவர்களும், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத இதர கல்லூரி பணியாளர்கள் கட்டாயம் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள், இதர பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர். மேலும், தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதனிடையே, கடந்த கொரோனா தொற்று அதிகரிப்பின் போது சில கல்லூரிகள் கோவிட் - 19 சிகிச்சை மையமாக செயல்பட்டது.
சில கல்லூரிகள் தற்போதும் கெகாரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. அதுபோன்ற கல்லூரிகளில் ஆன்லைன் வழியிலான வகுப்புகளையே தொடர விரைவில் முடிவு செய்யப்படும்.
மேலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தினைக் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும்.
பெரும்பாலானோர் தற்போது வரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் உள்ளனர். அவ்வாறு இருப்பின், கல்லூரி நிர்வாகம் சுகாதாரத்துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த முறை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பரவியது. அதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தற்போது கல்லூரி திறந்த பிறகு நோய்த்தொற்று அறிகுறி உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், உடன் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் ஆர்டி- பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை. இதர மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி கல்லூரி நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்புக் குழு அமைத்து, வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதோடு, கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளைச் செய்தட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment