அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து விதமான வங்கி பணம் டெபிட்
வங்கி கணக்கில் மொபைல் எண் இணைப்பு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனைத்து விதமான வங்கி ஆட்டோ டெபிட் பேமெண்ட்களுக்கும் இரு முறை ஒப்புதல் முறையில் பணம் டெபிட் செய்யப்படும்.
இதனால் உங்கள் வங்கி கணக்கில் சரியான மொபைல் எண்-ஐ இணைக்க வேண்டும். இல்லையெனில் தவணை ஆட்டோ டெபிட் செய்யப்படாமல் அபராதம் எதிர்கொள்ள வேண்டி வரும். அதாவது வங்கிகள் தானாக டெபிட் செய்யும் அனைத்து டெபிட்களும் இனி உங்கள் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
இதற்குக் கட்டாயம் சரியான மொபைல் எண் உடன் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். வீட்டுக் கடன், வாகன கடன், கார் லோன், பைக் லோன், பர்சனல் லோன், கல்வி கடன், மியூச்சுவல் பண்ட் SIP, கரென்ட் பில், போன் பில், நெட்பிளிக்ஸ் கட்டணம், கிரெடிட் கார்ட் பில் என ஒவ்வொரு மாதமும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஆட்டோ டெபிட் செய்யப்படும்
தொகைக்கு two-factor authentication கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த முறை ஏப்ரல் 1ஆம் தேதியே அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் மக்களுக்குத் தங்கள் வங்கிக் கணக்கில் சரியான மொபைல் எண் இணைக்கச் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment