வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 24, 2021

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? மத்திய ஆரோக்கியம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

வாட்ஸ்அப் செயலியில் உள்ள mygov corona helpdesk மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம். முன்னதாக வாட்ஸ்அப் செயலி மூலம் கொரோனாவைரஸ் சார்ந்த விவரங்களை வழங்க mygov corona helpdesk பெயரில் பாட் ஒன்று உருவாக்கப்பட்டது. 

        இந்த பாட்-ஐ பயன்படுத்த பயனர்கள் முதலில் 9013151515 எனும் மொபைல் நம்பரை சேமிக்க வேண்டும். வாட்ஸ்அப் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? - ஏற்கனவே செய்யவில்லை எனில், 9013151515 எனும் மொபைல் நம்பரை போனில் சேமிக்க வேண்டும். - வாட்ஸ்அப் செயலியில் mygov corona helpdesk என தேட வேண்டும். - பின் 'Book Slot' என குறுந்தகவல் அனுப்ப வேண்டும். - 

            இனி மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஒ.டி.பி. அனுப்பப்படும். இந்த ஒ.டி.பி.-யை சாட்டில் அனுப்ப வேண்டும். - உங்கள் மொபைல் நம்பரில் பலருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால், யாருக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என பெயரை தேர்வு செய்யவும். - உங்களுக்கு தேவையான தேதி, நேரம், இடம் மற்றும் தடுப்பூசி விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். - முன்பதிவை சாட் பாட் உறுதிப்படுத்தும்.

No comments:

Post a Comment