ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் எவ்வளவு சம்பளம் இருக்கும்..?!
பல கோடி இந்திய இளைஞர்களின் கனவு ஐபிஎஸ், பள்ளியில் படிப்பில் இருந்து இதற்காகத் தயாராகி வரும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஐபிஎஸ் என்பது ஒரு பதவி மட்டும் அல்லாமல் மாபெரும் கடமை.
நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் துவங்கி குற்றங்களைக் குறைப்பது, கண்டறிவது எனத் தொடங்கி அடுக்கிக்கொண்டே போகலாம். சமீபத்தில் தமிழ்நாட்டின் டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட சைலேந்திர பாபு அவர்களும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிற துறைகளில் இருப்பது போல் அனுபவம், பதவி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பளம் மாறுபடும். இந்த வகையில் புதிதாகப் பணியில் சேரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் சம்பள அளவீட்டு எவ்வளவு..? சம்பளத்தைத் தாண்டி கிடைக்கும் சலுகைகள் என்ன..? என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
புதிதாகப் பணியில் சேரும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56,100 ரூபாய் மட்டுமே, பலரும் லட்சக் கணக்கில் சம்பளம் பெறுவார்கள் என நினைப்பது உண்டு. ஆனால் ஒரு புதிய ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56100 ரூபாய் மட்டுமே.
கிராக்கிப்படி அளவு இதன் அடிப்படையில் தான் பிற கொடுப்பனவுகள் அளிக்கப்படும். அந்த வகையில் அடிப்படை சம்பளத்தின் மீதான 21 சதவீத தொகையைக் கிராக்கிப்படி-யாக அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 11,781 ரூபாய் அளிக்கப்படும்.
பயணக் கொடுப்பனவு பிரிவு பயணக் கொடுப்பனவு, இதில் 3 வகையாகப் பிரிக்கப்படுகிறது. கிளாஸ்x, கிளாஸ் Y மற்றும் கிளாஸ் z. இந்தப் பயணக் கொடுப்பனவு அரசு வாகனம் இல்லாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும், பொதுவாக அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் அரசு வாகனங்கள் கொடுக்கப்படுவது வழக்கம்.
பயணக் கொடுப்பனவு அளவு வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கும் (பணி செய்யும் இடம்), காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கும் செல்வதற்காகப் பயன்படுத்தும் சொந்த வாகனங்களுக்கு இந்தப் பயணக் கொடுப்பனவும் கொடுக்கப்படுகிறது. கிளாஸ் X பிரிவில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 8,712 ரூபாயும், கிளாஸ் Y மற்றும் கிளாஸ் Z பிரிவில் இருப்போருக்கு 4356 ரூபாய் அளிக்கப்படுகிறது.
மேலும் வீட்டு வாடகை கொடுப்பனவு, பெரும்பாலும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருக்கும் வீடுகள் அளிக்கப்படும். அரசு தங்குவதற்கு வீடு அளிக்காத பட்சத்தில் குத்தகை அல்லது வாடகை வீட்டிற்கு ஐபிஎஸ் அதிகாரி செல்ல வேண்டி வரும்.
இப்போது இந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 முதல் 30 சதவீதம் வரையிலான கொடுப்பனவு அளிக்கப்படும். 95 சதவீதம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அரசு வீடுகள் கொடுக்கப்படும்.
வீட்டு வாடகை கொடுப்பனவு அளவு இந்த நிலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பயணக் கொடுப்பனவு தவிர்த்து மொத்தம் 67881 ரூபாய்ச் சம்பளமாகப் பெற முடியும், ஆனால் வருமான வரி இருப்பதால் இந்தக் கணக்கீடு போக 50911 ரூபாய் கையில் சம்பளமாகக் கிடைக்கும்.
இதைத் தவிர்த்து டிஜிபி பண்ட், போலீஸ் ஆபிசர் கடன் பத்திரம் போன்ற இதர பல திட்டங்களுக்கும் இருக்கும் காரணத்தால் குறிப்பிட்ட 50911 ரூபாய் அளவை விடவும் சற்று குறைவாகவே கிடைக்கும்.
ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் சீனியாரிட்டி, பதவி ஆகியவற்றின் படி 56,100 ரூபாய் முதல் 2,25,000 வரையில் அதிகரிக்கும்.
டிஜிபி சம்பளம் உதாரணமாக டிஜிபி அல்லது ஐபி டைரக்டர் அல்லது சிபிஐ டைரக்டர் பதவியில் இருப்போருக்கு 2,25,000 ரூபாய் வரையில் சம்பளமாகப் பெற முடியும். இதைத் தாண்டி கிராக்கிபடி, பயணக் கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவையும் உண்டு. உயர் பதவியில் இருப்போருக்கு இதர பல சலுகைகளும் உண்டு.
பதவியும் சம்பளமும் எந்தப் பதவிக்கு எவ்வளவு அடிப்படை சம்பளம்
Director General of Police அல்லது Director of IB அல்லது Director of CBI- ரூ.2,25,000.00
Director General of Police - ரூ. 2,05,400.00
Inspector General of Police - ரூ. 1,44,200.00
Deputy Inspector General of Police - ரூ.1,31,100.00
Senior Superintendent of Police - ரூ. 78,800.00
Additional Superintendent of Police - ரூ.67,700.00
Deputy Superintendent of Police - ரூ. 56,100.00
மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளை விடவும் ஐஏஎஸ் அதிகாரிகளின் சம்பளம் சற்று அதிகம்.
No comments:
Post a Comment