இனி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் வேக்சின் போடலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 22, 2021

இனி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் வேக்சின் போடலாம்.

இனி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் வேக்சின் போடலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் இயங்கும் வேக்சின் மையத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கி வைத்தார் அப்போது அமெரிக்கா வாழ் தமிழர்களின் அறக்கட்டளை சார்பில் ரூ. 2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.         
    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பில் ரூ. 2.36 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவை விரைவில் 15 அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பப்படும். 

       புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல அரியலூர் மாவட்டத்தில் 100% அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது இப்போது சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் வேக்சின் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். நாளை (ஆகஸ்ட் 23) முதல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் கொரோனா வேக்சின் போடும் பணிகள் நடைபெறும். 

        சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் கொரோனா நோயாளிகளைத் தங்க வைத்ததாலேயே கட்டடம் பலவீனமானது என்று வினோதமான விளக்கத்தைக் கட்டுமான நிறுவனத்தினர் கொடுத்துள்ளார். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது. 

     தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கொரோனா மையம் ஏற்படுத்தப்பட்டு, கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கெல்லாம் எந்தவொரு சேதாரமும் ஏற்படாத நிலையில், புளியந்தோப்பில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மட்டும் அதனால் சேதமடைந்ததாக்கக் கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment