பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் :
01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை
* வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள்
* 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.
* ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும்.
* போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.
* உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும்
* தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி ( Online Class ) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
* மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.
* மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.
* பள்ளிவளாகத்தில் அனைவரும் SOP தவறாது பின்பற்ற வேண்டும்.
* அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
* பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகைபுரிய வேண்டும்.
* கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
* கோவிட் -19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
* கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் , அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.
* 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.
* EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
* மருத்துவ உதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலைய அலைபேசி எண் ( Help Line ) உள்ளிட்டவிவரங்கள் தகவல்பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும் .
* EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.
* மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.
* EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.
* சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.
* P.E.T. , N.S.S. , N.C.C. , தொடர்பான செயல்பாடுகள் பள்ளிவளாகத்தில் செயல்படுதல் கூடாது.
* மாணவர்களுக்கான சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும்.
* தேவைப்படின் RBSK தொடர்புகொண்டு சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி , SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
* மாணவர்களுக்கான இலவச பேருந்துபயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
* சத்துமாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் .
* 45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.
* அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால் , மேற்காணும் அனைத்து தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment