பிஎப் கணக்கு உடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி..?
மத்திய அரசு பிஎப் கணக்கு உடன் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்த இணைப்பிற்காக ஆகஸ்ட் 30ஆம் தேதி வரையில் நீட்டியுள்ளது.
எனவே சில நிமிடங்களில் உட்கார்ந்த இடத்திலேயே பிஎப் கணக்கின் யூஏஎன் எண் உடன் ஆதார் எண் இணைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
1. முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்
2. உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.
3. மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, KYC கிளிக் செய்யுங்கள்
4. KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
5. ஆதார் எண் இல்லாத பட்சத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள்.
6. ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள், அதன் பின்பு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
7. Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றைச் சரிபார்க்கப்படும்.
8. அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கை நீங்கள் பெறுவீர்கள். ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என எழுதப்பட்டு இருக்கும்
No comments:
Post a Comment