தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்வுகளும் நீடிப்பும்....... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 22, 2021

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்வுகளும் நீடிப்பும்.......

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்

 செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது: 

 செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும்.

 பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

 உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். 

 அனைத்துக் கல்லூரிகளும் செப். 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

 அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். 

 ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

 அங்கன்வாடி மையங்கள், செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்கு செயல்பட அனுமதிக்கப்படும். 

 ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும். 

 மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். 

 நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படும். 

 தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி. 

 50% பார்வையாளர்களுடன் ஆகஸ்ட் 23 முதல் திரையரங்குகள் இயக்க அனுமதிக்கப்படும். 

 கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். 

 உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

 இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும், செயல்பாடுகளும் ஆகஸ்ட் 23 முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். 

 தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன்  செயல்பட அனுமதிக்கப்படும்.


No comments:

Post a Comment