ஊதியம் இரட்டிப்பாக உயர்வு: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 24, 2021

ஊதியம் இரட்டிப்பாக உயர்வு: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

ஊதியம் இரட்டிப்பாக உயர்வு: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு தமிழக சட்ட சபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது 

         இதில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பு ஊதியம் இப்போதுள்ள 1000 ரூபாயிலிருந்து 2000மாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

         தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. 

         இந்த கொள்கை விளக்க குறிப்பில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையை செய்ய வேண்டிய காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றும், தற்போது இவற்றிற்கு தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

         மாவட்ட பிரிப்புகளுக்கு உள்ளான மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கொள்கை விளக்க குறிப்பில் தேர்தல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் 27 மாவட்டங்களில் 2019-20ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடந்தது என்றும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment