குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 21, 2021

குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

குரோம்பேட்டை ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் குரோம்பேட்டையில் உள்ள மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக ஐ.டி.ஐ.யில் (தொழில்‌ நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி) காலியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.                          மாணவர்கள்‌ சேர்க்கை தொடர்பாக தொழில்‌நுட்பப்‌ பயிலகக்‌ கல்லூரி இயக்குநர்‌ அன்பு ஆபிரகாம்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ தொழில்‌ பயிற்சி நிறுவனம் 1984ஆம்‌ ஆண்டு முதல்‌ இயங்கி வருகிறது. இது மத்திய அரசின்‌ அங்கீகாரம்‌ பெற்று, குரோம்பேட்டையில்‌ செயல்பட்டு வருகிறது. 

            இந்நிறுவனத்தில்‌ இதுவரை 1,252 மாணவர்கள்‌, அனுபவம்‌ வாய்ந்த பயிற்சி வல்லுநர்கள்‌ மூலம்‌ சிறந்த முறையில்‌ பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்‌. இந்நிறுவனங்களில்‌ பயின்ற மாணவர்கள்‌ பலர்‌ அரசு மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களில்‌ பணிபுரிந்து வருகிறார்கள்‌. இந்நிலையில் இங்கு 2021ஆம்‌ ஆண்டிற்கான மாணவர்‌ சேர்க்கைக்குப் பணியாளர்களின்‌ வாரிசுகள்‌ போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10ஆம்‌ வகுப்புத் தேர்ச்சி பெற்ற, தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.                                     ஆண்டுதோறும்‌ 72 இடங்கள்‌ நிரப்பப்பட உள்ளன. படிப்பின் கால அளவு இரண்டு ஆண்டுகள் ஆகும்‌. விண்ணப்பப் படிவங்களைப்‌ பெறுவதற்கு முதல்வர்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்‌ தொழிற்‌பயிற்சி நிலையம்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக பயிற்சி நிலைய வளாகம்‌, காந்தி நகர்‌, குரோம்பேட்டை, சென்னை-600 044, தொலைபேசி எண்- 044-29535177 / கைபேசி எண்- 9445030597 என்ற முகவரியில்‌ அணுகவும்‌. 

 மின்னஞ்சல்‌ முகவரி - mtciti591@gmail.com விண்ணப்பப் படிவத்தினை mtcbus.tn.gov.in என்ற இணையதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்யலாம்‌. 

நேரிலும்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, விண்ணப்ப படிவத்தினைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசித் தேதி- 30.08.2021''. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment