தமிழகத்தில் கியூசெட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்.17,18 தேதிகளில் தேர்வு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 19, 2021

தமிழகத்தில் கியூசெட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்.17,18 தேதிகளில் தேர்வு!

தமிழகத்தில் கியூசெட் நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு – செப்.17,18 தேதிகளில் தேர்வு! 

                நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வழங்க நடத்தப்படும் “கியூசெட்” நுழைவு தேர்வு தமிழக மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

         கியூசெட் நுழைவு தேர்வு: மத்திய அரசு சார்பில் தமிழகம், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர கியூசெட் என்ற மத்திய பல்கலை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

            இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment