அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு இணைய வழி கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என நோக்கத்தோடு வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு வட்டார ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பேரணாம்பட்டு டீச்சர்ஸ் அகாடமி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இணையவழியில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை எவ்வாறு நிகழ்த்தலாம் என பயிற்சி அளித்து வருகின்றனர்.
இன்றைய சூழலில் மாணவர்கள் ஆசிரியர்களிடையே நேரடியான கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் நடைபெற முடியாத சூழலில் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற பயிற்சியில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் தயாரிப்பது எப்படி என ஆசிரியர் ஹரிஹரன் அவர்கள் பயிற்சி அளித்தார். அதனை தொடர்ந்து இணையவழியில் சான்றிதழ் வழங்குவது குறித்த பயிற்சியினை பட்டதாரி தலைமை ஆசிரியர் திரு எலிசா அவர்கள் எடுத்துக் கூறினார்.
பயிற்சியில் பாலக்கோடு வட்டார கல்வி அலுவலர் திரு ஜார்ஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதேபோல் ஈரோடு வெள்ளாளர் கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி டாக்டர்.அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு இணைய வழி கல்வி அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிகளை ஆசிரியர் மில்லர் ராஜ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இப்பயிற்சியானது தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment