சுதந்திர தினம் குடியரசு தினம் வித்தியாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 15, 2021

சுதந்திர தினம் குடியரசு தினம் வித்தியாசம்

 முதல் வித்தியாசம் ...

ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது

கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்

சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு " கொடியேற்றம் " அதாவது " Flag Hoisting " என்றழைக்கபடுகிறது.,

ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று , 

கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை " கொடியை பறக்கவிடுதல் "  அதாவது " Flag Unfurling " என்பார்கள்..


இரண்டாவது   வித்தியாசம் ...


சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர்தான் நாட்டின் முதல் மனிதராக Political Head ஆக கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு Constitutional Monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.


இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் அன்றைய தினம் மாலையில் ரேடியோ,  தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்.


குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..


மூன்றாவது வித்தியாசம் ...


சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்படுகிறது .

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது .


No comments:

Post a Comment