பாஸ்மாபெண்டா மலை கிராமத்தில்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராம பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளை கண்டறிந்து அதை போகக்கூடிய வழிமுறைகளையும் செய்ய வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதுகுறித்து இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க பேர்ணாம்பட்டு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் திரு.நாகராஜ் அவர்களின் தலைமையில் பாஸ்மார்பெண்டா அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து (OSC )பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி அவர்களை கண்டறியும் கணக்கெடுக்கும் பணி துவக்கியது.
No comments:
Post a Comment