7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 20, 2021

7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு

 
7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு

பல மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவிகிதம் உயர்த்தி 28 சதவிகிதமாக உயர்த்தியுள்ளன, இது ஜூலை 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது.

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 28% ஆக அரசு உயர்த்தியுள்ளது. சில ஊடக அறிக்கைகளின் படி, டி.ஏ உயர்வால் அதிகரித்த சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை மாத சம்பளத்துடன், 28 சதவிகித அகவிலைப்படியும் வந்துள்ளது.

கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் (Dearness Allowance) இருந்த முடக்கத்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. ஜூலை 1 முதல் டி.ஏ முடக்கம் நீக்கப்பட்டது. ஜூலை 14 -ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு குறித்து அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA-வின் பயனும் அகவிலைப்படியுடன் கிடைத்துள்ளது. HRA தொகை அவர்களின் நகரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. உத்தரவின் படி, நகரங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை X, Y, Z என பெயரிடப்பட்டுள்ளன. X நகரத்தில் வசிக்கும் மத்திய அரசு ஊழியருக்கு 27% வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), Y க்கு 18% மற்றும் Z க்கு 9% வழங்கப்பட்டுள்ளது. எச்ஆர்ஏவின் நன்மை சேவையில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை.

அகவிலைப்படியின் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அகவிலைப்படி 11% (DA Hike) உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் டிஏ கணக்கிடப்படுகிறது. ஒருவரின் சம்பளம் 20000 ரூபாய் என்றால், அவருடைய சம்பளம் 11%, அதாவது 2200 ரூபாய் அதிகரிக்கும்.


நகைகடன் விவரம் அறிய

அரசு ஊழியர்களுக்கான டிஏவை அதிகரிப்பதாக அறிவித்த மாநிலங்களின் விவரம்

1) உத்தரபிரதேசம்

உத்தரபிரதேச மாநில அரசு மத்திய அரசின் உத்தரவின் படி அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இந்த மாற்றத்தால் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2) ஜம்மு காஷ்மீர்

ஜம்மு -காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தியது. இந்த மாற்றம் ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்தது.

3) ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதம் உயர்த்தியது. ஜூலை 1 முதல் டிஏ அடிப்படை சம்பளத்தில் 28 சதவீதமாக இருக்கும்.

4) ஹரியானா

ஹரியானா அரசு ஜூலை 1 2021 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படியை அதிகரித்தது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதம் அதிகரிக்கும் என்று சமீபத்தில் அறிவித்தார். இது ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 இல் எழும் கூடுதல் தவணைகளை உள்ளடக்கியது.

5) கர்நாடகா

கர்நாடக மாநில அரசு கூடுதல் தவணைகளான அகவிலைப்படியை வழங்குவதாக அறிவித்தது. இது ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை இருக்கும் 11.25 சதவீதத்திலிருந்து 21.5 சதவிகிதத்திற்கு பொருந்தும்.

6) ராஜஸ்தான்

மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்த ராஜஸ்தான் அரசு முடிவு செய்தது.

 

No comments:

Post a Comment