மாணவர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்..; பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 15, 2021

மாணவர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்..; பள்ளி கல்வி துறை அதிரடி உத்தரவு!

கொரோனா நோய் பரவல் சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான கல்விக்கட்டணம் தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித் துறை அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

கோவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

கோவிட் 19 தொற்று நோய் சூழ்நிலை காரணமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால உத்தரவுகளின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 2020-21 கல்வியாண்டிற்கான கட்டணமாக 2019-20 கல்வியாண்டிற்காக கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் 75% கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தொடர்ச்சியான அசாதாரண தொற்றுநோயான COVID 19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 2021-22 கல்வியாண்டிற்கான கட்டணமாக பெற்றோரிடமிருந்து 2019-20 கல்வியாண்டிற்காக கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 75%-ஐ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளின் மூலம் (40% மற்றும் 35%) வசூலிக்க வேண்டும் என முதல்வர் முடிவு செய்துள்ளார்.

மேலும் வருடாந்திர கட்டணம், பஸ் கட்டணம், சீருடை கட்டணம், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கான கட்டணம், நூலக கட்டணம், ஆய்வக கட்டணம். விளையாட்டு மற்றும் நுண்கலை கட்டணம், மருத்துவ கட்டணம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான கட்டணம் போன்ற வேறு எந்த கட்டணத்தையும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் வரை வசூலிக்கக்கூடாது. இவ்வாறு புதுச்சேரி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment