குறைந்தது மாதத்திற்கு ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை கால வரம்பு 5 ஆண்டுகள். இந்த ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது
கவனத்தில் கொள்ளுங்கள்:
ரெக்கரிங் டெபாசிட் தொடர்ந்து சரியாக டெபாசிட் செய்யாவிட்டால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் அதேபோல, தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நீங்கள் டெபாசிட் செய்யாமல் இருந்தால் உங்களது சேமிப்புக் கணக்கு மூடப்பட்டுவிடும். பின்பு இரண்டு மாதங்கள் கழித்தே அதை ஆக்டிவேட் செய்ய முடியும்.
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் அதற்கு 5.8 சதவிகித வட்டி கிடைக்கும். ஒவ்வொரு மாதத்தின் ரூ. 10,000 முதலீடு அடிப்படையில் உங்கள் பணம் முதிர்வு காலத்தில் ரூ.6,96,967 ஆக அதிகரிக்கும். 5 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை ரூ.6 லட்சமாகவும், வட்டித் தொகை ரூ.99,967 ஆகவும் இருக்கும். இதனால், முதிர்வு தொகை சுமார் ரூ.7 லட்சம் கிடைக்கும். இடையில் உங்களுக்கு அவசரத் தேவை என்றால் இந்த சேமிப்பு திட்டத்தின் மீது கடன் கூட பெறலாம்.
No comments:
Post a Comment