கொரோனா பரவல் இருப்பதால், நடப்பு செமஸ்டருக்கான பொறியியல் வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களைத் தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு நடப்புசெமஸ்டருக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை, நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து செய்முறை தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதியும், செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13-ஆம் தேதியும் தொடங்கப்பட இருக்கிறது
இந்தத் தேர்வுகள் முடிவடைந்ததும், அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த வகுப்புகள் நடைபெற வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment