ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இதுவரை ஆதார் உடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அதை செய்யுமாறு தன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 15, 2021

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இதுவரை ஆதார் உடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அதை செய்யுமாறு தன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இதுவரை ஆதார் உடன் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால் உடனடியாக அதை செய்யுமாறு தன் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே பான் மற்றும் ஆதாரை இணைத்துள்ள பயனர்கள் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்த வேண்டாம். இதுபற்றிய அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள ட்விட்டரில் இந்த வெளியிட்டது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ட்விட்டர் ஹேண்டிலின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான ட்வீட் ஆனது, "வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தையும் தவிர்க்கவும் மற்றும் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்."

பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், "பான் inoperative/inactive ஆக இருக்கும் மற்றும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை நிகழ்த்த முடியாது" என்று எஸ்பிஐ தன் பயனர்களை எச்சரித்துள்ளது.

பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி ஆக செப்டம்பர் 30, 2021 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையானதைச் செய்ய நிறைய நேரம் இருக்கிறது.

பான் மற்றும் ஆதார் ஆகியவற்றை விரைவாக இணைக்க, SBI தன் பயனர்களை புதிய ஐடி போர்ட்டலுக்கு - https://www.incometax.gov.in/iec/foportal/ செல்லுமாறும் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment